மும்பையில் புதிய வீட்டில் குடியேறும் ஷாருக்கான்.., அதன் வாடகை எவ்வளவு தெரியுமா?
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் ஷாருக்கான்.
இவரது நடிப்பில் வெளிவந்த பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
இதில் குறிப்பாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளிலும், தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மும்பையில் ஷாருக்கான் அவருக்கு சொந்தமாக மன்னத் என்ற பெயரில் 6 மாடி வீட்டில் வசித்து வருகிறார்.
2001ஆம் ஆண்டு ஷாருக்கான் மும்பையில் மன்னத் என்ற சொகுசு வீட்டை விலைக்கு வாங்கினார்.
அவர் வாங்கும்போது அந்த வீட்டின் விலை 13 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அதன் மதிப்பு 200 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் விலை உயர்ந்த ஜிம், நூலகம், பிரைவேட் தியேட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. மும்பையில் உள்ள மன்னத் வீட்டில் ஏற்கனவே 6 மாடி கட்டிடம் உள்ளது.
மேலும் இதில் இரண்டு மாடிகள் கட்டிக் கொள்வதற்கு ஷாருக்கான் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அவர் இன்னொரு வீட்டில் ஷாருக்கான் குடிபெயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாருக் கான் குடும்பம் அடுத்து மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் இருக்கும் ஒரு அபார்ட்மென்டுக்கு குடிபெயர இருக்கின்றனர்.
அந்த அப்பார்மென்டின் நான்கு தளங்களை ஷாருக் வாடகைக்கு எடுத்துள்ளார். அதன் வாடகை மட்டும் மாதம் 24 லட்சம் ரூபாய்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |