குழந்தையை Produce செய்வோம்: பொது மேடையில் சர்ச்சையாக பேசிய ஷாருக்கான்?
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ள படம் ஜவான்.
இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே நாயகிகளாக நடித்துள்ளனர்.
பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, யோகி பாபு, அம்ரிதா ஐயர் உள்பட பலர் நடித்து அதிரடி ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதன் ஆடியோ ரிலீஸ் விழா சென்னையில் பிரமாண்டமாக நேற்றிரவு நடைபெற்றது.அப்போது ஷாருக்கான் மேடையில் பேச அழைத்தபோது ரசிகர்கள் ஆர்வமாக கூச்சலிட்டனர்.
ஷாருக்கான் மேடையில் பேசியது!
இந்த மாதிரி ரசிகர்கள் கரகோஷத்துடன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என் வாழ் நாளில் இதுவே முதல் முறையாகும். தமிழ் சினிமாவில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் அபார திறமை எனக்கு ஏற்கனவே தெரியும்.
கமல்ஹாசனின் ஹேராம் படத்துக்காக நான் முதல் முறையாக தமிழ் பேசிய அனுபவம் உள்ளது என்றார்.மேடைக்கு முன்வரிசையில் இயக்குநர் அட்லீ, அவரது மனைவி பிரியா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
திடீரென அட்லீ மனைவி பிரியாவை பார்த்து "நான் உங்களுக்கு பிறகு நன்றி சொல்கிறேன். நாம் இருவரும் மற்றொரு குழந்தையை Produce செய்வோம். அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்களும், அட்லீயும் சேர்ந்து குழந்தையை உருவாக்குங்கள். நான் இல்லை. இப்போது என்னால் இணைந்து Produce செய்ய முடியும். அதில் பிரச்சனை இல்லை. ஏனென்றால் நாம் இப்போது ப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டோம்" என்றார்.
அதைத் தொடர்ந்து யோகி பாபு, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோரை பாராட்டி பேசினார் ஷாருக் கான்.
அட்லீ, அட்லீ மனைவி குறித்து அவர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பேச்சின் வீடியோ கிளிப்பை சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். சிலர் அவர் கலகலப்பாக பேசியதை பெரிதாக்க வேண்டாம் என்றும், பாலிவுட் திரையுலகம் அப்படிதான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |