மைதானத்தில் மூத்த வீரர்களுக்கு முன் சிகரெட் அடித்த பிரபல கிரிக்கெட் வீரர்! வைரலான புகைப்படம்
பிபிஎல் போட்டிக்குப் பிறகு மைதானத்திலே சிகரெட் பிடித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாஜாத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபில் தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலை பிபிஎல் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்த்து களத்தில் இருந்த சில வீரர்களில் ஷாஜாத்தும் ஒருவர், எனினும் மழையால் போட்டி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மைதானத்தில் மூத்த வீரர்கள் இருந்த போதிலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாஜாத் சிகரெட் பிடித்துள்ளார்.
ஷாஜாத் சிகரெட் பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
மூத்த பேட்ஸ்மேன் தமிம் இக்பால் அவரை டிரஸ்ஸிங் அறைக்குள் செல்லச் சொன்ன நிலையில், மினிஸ்டர் குரூப் டாக்கா பயிற்சியாளர் மிசானூர் ரஹ்மான் ஷாஜாத்தை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
ஷாஜாத்தின் நடவடிக்கை BCB நடத்தை விதியின் 2.20 விதியை மீறியதாகக் கண்டறியப்பட்டது, எனவே அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
BCB-யின் செய்திக்குறிப்பின்படி, ஷாஜாத் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் தண்டனையை ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி போட்டி அதிகாரிகள் ஷாஜாத்தை கண்டித்துள்ளனர்.