அது நாசமாக்கிவிட்டது! பாகிஸ்தான் கிரிக்கெட்டை விட்டு வெளியேறுகிறேன்..24 வயது வீரரால் அதிர்ச்சி
40 போட்டிகளில் விளையாடாமல் அமர வைக்கப்பட்டதாகக் கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறுவதாக இளம் வீரர் ஷாஜைப் பட்டி அறிவித்துள்ளார்.
ஷாஜைப் பட்டி
பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தவர் சியால்கோட்டைச் சேர்ந்த ஷாஜைப் பட்டி (Shazaib Bhatti). 24 வயதாகும் இவர் அதிர்ச்சிகர முடிவை அறிவித்துள்ளார்.

என்ன தல நாக்அவுட் போட்டினாலே 80, 90 ரன்னா? வாஷிங்டன் சுந்தரின் கேள்விக்கு சஞ்சு அளித்த பதில் (வைரல் வீடியோ)
2024-25 குவைத்-இ-அசாம் ட்ராபி இறுதிப் போட்டியில், ஷாஜைப் விளையாடிய சியால்கோட் ரீஜியன் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ரீஜியன் அணியை வீழ்த்தியது. இதில் ஷாஜைப் முக்கிய பங்கு வகித்தார்.
ஆனாலும், அவர் போட்டியில் வெற்றிபெறும் செயல்திறன் இருந்தபோதிலும் மீண்டும் மீண்டும் ஓரங்கட்டப்பட்டார்.
மேலும், கிட்டத்தட்ட 40 தொடர்ச்சியான போட்டிகளுக்கு பெஞ்சில் உட்கார வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
கிரிக்கெட் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது
இந்த நிலையில், ஷாஜைப் பட்டி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறேன். 24 வயதில் நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விட்டு வெளியேறுகிறேன். கடந்த ஆண்டு நேரடி தொலைக்காட்சியில் குவைத் இ அசாம் இறுதிப்போட்டியில் வென்றேன்.

அதன் பிறகு நான் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 40 போட்டிகளுக்கு ஓய்வெடுக்கப்பட்டேன். பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவதுதான் என்னுடைய ஒரே கனவு. ஆனால் அரசியல், ஊழல், கட்டமைப்பு இல்லாமை எனது கிரிக்கெட் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டது.
இன்னும் பலவற்றை இப்போது எல்லோரும் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது எனக்கு இப்போது தெரிகிறது. விடைபெறுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
I AM LEAVING PAKISTAN CRICKET FOREVER 💔 pic.twitter.com/RoPcd3Gd1H
— Shahzaib Bhatti (@shahzaibcric) March 8, 2026

இளம் வீரரான ஷாஜைப் பட்டியின் இந்த முடிவானது பாகிஸ்தான் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |