கிரீவ்ஸ் 180, ஹோப் 112 ஓட்டங்கள்: இலங்கைக்கு பதிலடியாக 499 குவித்த மே.தீவுகள்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் ஷாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் சதம் விளாசியது.
லஹிரு உதரா 188 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 549 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. லஹிரு உதரா 188 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரண்டன் கிங் (17), அமிர் ஜாங்கோ (9) ஆகியோர் சொதப்ப ஜான் காம்ப்பெல் 72 ஓட்டங்களும், கவேம் ஹாட்ஜ் 31 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர்.
ஹோப், கிரீவ்ஸ் நங்கூர கூட்டணி
அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 144 ஆக இருந்தபோது, ஷாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் நங்கூர கூட்டணி அமைத்தனர். இருவருமே சதம் விளாச, ஷாய் ஹோப் (Shai Hope) 112 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஹோப், கிரீவ்ஸ் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 242 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் 499 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கடைசி விக்கெட்டாக அவுட் ஆன ஜஸ்டின் கிரீவ்ஸ் (Justin Greaves) 180 ஓட்டங்கள் குவித்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.
அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளும், பிரபத் ஜெயசூரியா 3 விக்கெட்டுகளும், மிலன் மற்றும் சோனல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |