மைதானத்திற்கு வெளியே பறந்த சாம் கர்ரனின் சிக்ஸ்! துபாய் கேபிட்டல்ஸ் இமாலய வெற்றி (வீடியோ)
ஷார்ஜாவில் நடந்த சர்வதேச லீக் டி20 போட்டியில், துபாய் கேபிட்டல்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தியது.
சாம் கர்ரன் மிரட்டல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 30வது போட்டியில் துபாய் கேபிட்டல்ஸ் மற்றும் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெஸெர்ட் வைப்பர்ஸ் (Desert Vipers) அணி 19.4 ஓவரில் 137 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. டென் லாரன்ஸ் 31 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.
சாம் கர்ரன் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28 ஓட்டங்கள் குவித்தார். குல்பதின் ஓவரில் சாம் கர்ரன் அடித்த சிக்ஸ், மைதானத்தை விட்டு வெளியே பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அபாரமாக பந்துவீசிய கியாஸ் அகமது 4 விக்கெட்டுகளும், மெக்காய் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
The Art: 4️⃣, 6️⃣
— International League T20 (@ILT20Official) February 3, 2025
The Artist: Sam Curran 🤩
The southpaw unfurls a couple of gorgeous hits to get his innings going. ⚡#DVvDC #DPWorldILT20 #RaceToThePlayoffs #AllInForCricket pic.twitter.com/vrrINvMnmr
துபாய் கேபிட்டல்ஸ் வெற்றி
பின்னர் ஆடிய துபாய் கேபிட்டல்ஸ் (Dubai Capitals) 17.1 ஓவரில் 138 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆடம் ரோஸிங்டன் 27 (18) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 52 (54) ஓட்டங்களும், குல்பதின் நைப் 55 (31) ஓட்டங்களும் விளாசினர்.
4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கியாஸ் அகமது (Qais Ahmad) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |