8 சிக்ஸர்! 39 பந்தில் 82 ரன்..உலகக்கிண்ணத்தில் ருத்ர தாண்டவமாடிய வீரர்
டி20 உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது.
128 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
பார்படாஸில் நடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க அணிகள் மோதின.
முதலில் ஆடிய அமெரிக்க அணி 128 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஆன்ரிஸ் கோஸ் 29 (16) ஓட்டங்கள் எடுத்தார்.
ஆந்த்ரே ரஸல் மற்றும் ரஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஹோப் விளாசல்
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஜான்சன் சார்லஸ் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அமெரிக்க பந்துவீச்சாளர்களின் ஓவர்களை சிதறடித்த ஹோப், ஆட்டமிழக்காமல் 39 பந்துகளில் 82 ஓட்டங்கள் விளாசினார்.
அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் நிக்கோலஸ் பூரன் 12 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 10.5 ஓவரில் 130 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |