முதல் டி20 சதம் விளாசிய கேப்டன்! படைத்த அபார சாதனை
மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஷாய் ஹோப், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டி20 சதத்தை பதிவு செய்தார்.
முதல் டி20 சதம்
செயின்ட் கிட்ஸில் நடந்த 3வது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஷாய் ஹோப் (Shai Hope) 57 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் குவித்தார். இது ஷாய் ஹோப்பிற்கு முதல் டி20 சதம் ஆகும்.
இதன்மூலம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய இரண்டாவது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) இந்த சாதனையை செய்திருந்தார்.
ஷாய் ஹோப் 46 டி20 போட்டிகளில் ஒரு சதம், 7 அரைசதங்களுடன் 1,161 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |