சமனில் முடிந்த போட்டி: சூப்பர் ஓவரில் திரில் வெற்றி..பதிலடி கொடுத்த மே.தீவுகள்
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக்கு சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
சௌமியா சர்கார் 45 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகள், வங்காளதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்தது.
முதலில் ஆடிய வங்காளதேசம் 7 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக சௌமியா சர்கார் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியும் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி சமன் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட, மேற்கிந்திய தீவுகள் முதலில் ஆடி 10 ஓட்டங்கள் எடுத்தது.
ஷாய் ஹோப் ஆட்ட நாயகன்
அடுத்து ஆடிய வங்காளதேசம் 1 விக்கெட்டுக்கு 9 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. 67 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்கள் எடுத்த மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஷாய் ஹோப் (Shai Hope) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் 23ஆம் திகதி நடைபெற உள்ளது.
West Indies win a Super Over thriller at Mirpur to keep the ODI series alive!
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 21, 2025
Scorecard: https://t.co/ZzkD4dGrsY pic.twitter.com/AZa6KlpybN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |