பாகிஸ்தானுக்கு எதிராக சதத்தை தவறவிட்ட ஷாய் ஹோப்: 311 ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் 311 ஓட்டங்கள் எடுத்தது.
ஷாய் ஹோப்
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கவேம் ஹாட்ஜ் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் (Shai Hope) 92 ஓட்டங்களில் இருந்தபோது மொஹம்மது அலி பந்துவீச்சில் அவுட் ஆகி சதத்தை தவறவிட்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணி 311 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மொஹம்மது அலி 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அப்பாஸ் 3 விக்கெட்டுகளும், குர்ரம் ஷாஷத் 2 விக்கெட்டுகளும், ஆமீர் ஜமால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
இமாம் உல் ஹக் 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷான் மசூத் 88 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |