நூறாவது போட்டியில் சதம்! மிரட்டலான உலக சாதனையை படைத்த வீரர்
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஷாய் ஹோப் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
டிரினிடாட்டில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 135 பந்துகளில் 115 ஓட்டங்கள் எடுத்தார். தனது நூறாவது போட்டியில் விளையாடிய அவர் சதம் விளாசியதன் மூலம் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
ஷாய் ஹோப் தனது 50வது போட்டியிலும், 100வது போட்டியிலும் சதம் விளாசியிருக்கிறார். வேறு எந்த வீரரும் இந்த சாதனையை இதுவரை செய்ததில்லை. அயர்லாந்து அணிக்கு எதிரான தனது 50வது போட்டியில் ஹோப் 170 ஓட்டங்கள் விளாசியிருந்தார்.
PC: AP Photo/Ricardo Mazalan
28 வயதாகும் ஷாய் ஹோப் 100 ஒருநாள் போட்டிகளில் 4,193 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்கள், 20 அரை சதங்கள் அடங்கும்.
PC: bdcrictime
PC: AFP