தோனி சொன்ன அந்த ஒரு விடயம்தான்! என்னை 326 ரன்கள் சேஸ் செய்ய உதவியது - ஷாய் ஹோப்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூறிய ஒரு விடயத்தை பயன்படுத்தினேன், அதுவே சதம் விளாச உத்வேகம் அளித்தது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்தார்.
ஆன்டிகுவாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 326 ரன்கள் இலக்கினை சேசிங் செய்து அபார வெற்றி பெற்றது.
அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
credit: AFP
போட்டி முடிந்ததும் பேசிய ஷாய் ஹோப், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் வெற்றி குறித்து கூறினார்.
அவர் கூறுகையில், 'வானிலை மற்றும் காற்று ஆகிய காரணிகளால் குறிப்பிட்ட ஓவரை மட்டும் குறிவைப்பதே சிறப்பான விடயம் என்று நான் நினைத்தேன். 49வது ஓவரில் இரண்டாவது சிக்ஸரை அடித்தபோது நான் தான் ஆட்டத்தை முடிக்க வேண்டும், வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே என் நோக்கமாக இருந்தது' என தெரிவித்தார்.
credit: Getty
மேலும் அவர் தோனி குறித்து கூறும்போது, 'ஒருமுறை எம்.எஸ்.தோனியுடன் பேசினேன். அப்போது அவர் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரம் களத்தில் இருப்பீர்கள் என்றார் அவர். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது. அதையே பயன்படுத்தினேன்' என குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |