ஷாய் ஹோப்பின் சரவெடி ஆட்டம்: கயானா அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி
கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.
சபீனா பார்க் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில், ஷாய் ஹோப்பின் அதிரடி ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.
ஹென்ரிக்ஸ் 40 ஓட்டங்கள்
கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகளுக்கு இடையிலான போட்டி கிங்ஸ்டனின் சபீனா பார்க்கில் நடந்தது. முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 117 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ரீஸா ஹென்ரிக்ஸ் 40 (32) ஓட்டங்கள் எடுத்தார். ரோவ்மன் பௌல் 24 (17) ஓட்டங்களும், கிர்க் மெக்கென்சி 16 ஓட்டங்களும் எடுத்தனர். மொஹம்மது நபி 4 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோஸப் மற்றும் இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 14.1 ஓவர்களிலேயே 118 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் (Shai Hope) ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார். 4 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் 19 ஓட்டங்கள் எடுத்த மொஹம்மது நபி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |