விவேக் சொன்ன அந்த வார்த்தை இன்னும் என் காதில் ஒலிக்கிறது! வேற எந்த நடிகரும் இப்படி செய்யமாட்டார்: நெகிழும் ஷகிலா
நடிகையான ஷகிலா விவேக் மறைவைக் கேட்டு, அவர் சொன்ன வார்த்தையை மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
பிரபல காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்தால் திரைப்பிரபலங்கள் பலரும் வேதனையில் உள்ளனர்.
அந்த வகையில் நடிகை ஷகிலா விவேக் பற்றி கூறுகையில், எனக்கு கேரளாவில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகவும் கஷ்டத்தில் இருந்தேன்.
அதை உணர்ந்த, நடிகர் விவேக், நீ ஒரு தமிழ் பெண்ணாக இருக்கும் நிலையில், கேரளாவில் அவர்கள் உனக்கு வாய்ப்பு தரவில்லை. அதன் காரணமாகவே நான் கேரளா நடிகர்களுக்கு இப்போது கால்ஷீட் கொடுப்பதே இல்லை என்று கூறினார்.
எந்த ஒரு நடிகரும் இப்படி செய்திக்க வாய்ப்பே இல்லை. அவர் சொன்ன அந்த வார்த்தை இப்போது வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி நான் துவண்டு போகும் நேரத்தில் எனக்காக ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்தவர் அவர்தான், அதனால் தான் அவருடைய மகன் இறப்பிற்கு சென்றேன். ஆனால் அவரின் இறப்பிற்கு செல்லவில்லை காரணம் அவருடைய மனைவியின் முகத்தை என்னால் பார்க்க முடியாது என கூறியுள்ளார்.