ஐபிஎல் தொடரிலிருந்து ஷகிப் அல் ஹசன் திடீர் விலகல் - ஷாக்கான ரசிகர்கள்!
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற உள்ளன.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் தொடர் சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகமாக தொடங்கியது. தற்போது ஐபிஎல் தொடரில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஷகிப் அல் ஹசன் திடீர் விலகல்
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக கொல்கத்தா வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.
வங்கதேச டெஸ்ட் மற்றும் டி20 அணிகளின் கேப்டன், சீனியர் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். ஒரு ஆல்ரவுண்டர் என்ற முறையிலும், கேகேஆர் அணியில் நீண்டகாலம் பங்களிப்பு செய்தவர் என்ற வகையிலும் அவரை ரூ.1.5 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்தது.
தற்போது, அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடி முடித்த பின்னர் தன்னால் ஐபிஎல்லில் விளையாட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஷகிப் அல் ஹசன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.