ஏன் “வைடு” பால் கொடுக்கல? களத்தில் நடுவரிடம் கத்திய பிரபல நட்சத்திர வீரர்.. வைரல் வீடியோ
கிரிக்கெட் போட்டியின் போது வைடு வழங்காத நடுவரை பார்த்து ஷகிப் அல் ஹசன் கோபத்தில் கத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஷகிப் அல் ஹசன்
வங்கதேசத்தில் பிபிஎல் என்னும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு தேசிய அணியின் கேப்டனாக வலம் வரும் அனுபவமிக்க வீரராக திகழ்பவர் ஷகிப் அல் ஹசன்.
பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அவர், அவ்வபோது மைதானத்தில் நிதானத்தை இழந்துவிடுகிறார். அதே போன்ற நிதானத்தை இழந்த சம்பவம் ஒன்று உள்ளூர் போட்டி ஒன்றில் அரங்கேறியுள்ளது.
A wide not given by the umpires makes Shakib Al Hasan furious. pic.twitter.com/KPgVWmYtrg
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 7, 2023
நிதானத்தை இழந்து கத்தினார்
அதாவது ஷகிப் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது பந்துவீச்சாளர் பவுன்ஸ் ஒன்றை வீசினார். அது ஷகிப்பின் தலைக்கு மேலே சென்றது. அது வைடுதான் என நினைத்து ஷகிப் லெக் அம்பயரை பார்க்க, லெக் அம்பயரோ வைடு வழங்காததால், ஆத்திரமடைந்த அவர், லெக் அம்பயரை பார்த்து மூன்று முறை ஆக்ரோஷமாக கத்தினார்.
மேலும், நடுவரின் அருகில் சென்று வைடு ஏன் வழங்கவில்லை எனக்கூறி கடும் வாக்குவாதம் செய்தார்.
எனினும், நிதானத்துடன் பேசிய நடுவர், ஓவரின் முதல் பவுன்சர் என்பதால், வைடு வழங்கவில்லை என்று தெரிவித்தார். இருந்தாலும், கோபம் தீராத ஷகிப், நடுவரின் முடிவில் திருப்தி இல்லாது காணப்பட்டார்.