ருத்ர தாண்டவம் ஆடிய வங்கதேச வீரர்கள்! த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
வங்கதேசத்தின் ஷகிப் - தாஸ் கூட்டணி 88 ஓட்டங்கள் குவித்தது
பாகிஸ்தானின் ரிஸ்வானுக்கு இது 21வது சர்வதேச டி20 போட்டி ஆகும்
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
முத்தரப்பு தொடரின் தனது கடைசி போட்டியில் வங்கதேச அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் ஷகிப் அல் ஹசன், லித்தன் தாஸ் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
அணியின் ஸ்கோர் 129 ஆக இருந்தபோது லித்தன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து 42 பந்துகளில் 68 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) எடுத்திருந்த ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனார்.
Twitter
வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா, முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 177 எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
ரிஸ்வான் 56 பந்துகளில் 69 ஓட்டங்களும், பாபர் அசாம் 40 பந்துகளில் 55 ஓட்டங்களும் விளாசினர். முகமது நவாஸ் அதிரடியாக 20 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்து மிரட்டினார்.
Twitter