டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள்! இலங்கை ஜாம்பவான் மலிங்கா சாதனையை முறியடித்த பிரபல வீரர்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற புதிய சாதனையை வங்கதேச கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.
முன்னாள் வங்கதேச அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் ஞாயிற்றுக்கிழமை ஸ்காட்லாந்துக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆண்களுக்கான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 108 விக்கெட்டுகளுடன் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஷாகிப் தற்போது 89 போட்டிகளில் இருந்து 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இதற்கு முன்னர் மலிங்க 84 டி20 போட்டியில் 107 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுத்தி (99), பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி (98) மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (95) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.