ரோகித், கோலி அவுட்! ஒரே ஓவரில் அதிர்ச்சி கொடுத்த வங்கதேச வீரர்
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித், கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.
பவுண்டரிகளை விளாசிய ரோகித்
இந்தியா-வங்கதேச அணிகள் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.
வங்கதேச அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தவான் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
@ICC
அதிர்ச்சி கொடுத்த ஷகிப்
அவரைத் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய ரோகித் சர்மா (27) விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் கைப்பற்றினார். அதன் பின்னர் அதே ஓவரில் விராட் கோலியின் (9) விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பேரதிர்ச்சி கொடுத்தார் ஷகிப்.
இந்திய அணி தற்போது வரை 13 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Ali Shahriyar Amin