பிக்பாஸ் வீட்டில் சிகரெட் பிடிக்கும் சகிலா..சர்ச்சையாகும் புகைப்படம்
பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் நடிகை சகிலா சிகரெட் பிடிக்கும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழில் ஏழாவது சீசன் அடுத்தவாரம் தொடங்க உள்ள நிலையில் , தெலுங்கில் ஏழாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது.
இதில் முதல் வாரத்திலேயே நடிகை கிரண் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் எதிர்பார்க்கப்பட்ட ஷகிலா, தமிழுக்கு வராமல் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சகிலா தெலுங்கு பிக்பாஸ் வீட்டுக்குள் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியிருக்கின்றனர்.
Shakeela and Kiran rathod smoking in relax time #Shakeela #KiranRathod #BiggBoss7Telugu pic.twitter.com/1QXDoId8oH
— HANISHA VERMA (@VermaHanisha) September 6, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |