ரசிகர்களுக்கு பிடித்த சக்திமான் தொடர் நடிகர் இறந்துவிட்டாரா? என்ன தான் ஆச்சு? வெளியான வீடியோ
சக்திமான் தொடரில் நடித்த முகேஷ் கண்ணா இறந்துவிட்டதாக செய்தி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில் தான் நலமாக இருப்பதாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரிய பாப்புலர் ஆன சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் சக்திமான். வாரம் ஒருநாள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சக்திமான் தொடர் தொலைக்காட்சியில் முன்னர் ஒளிப்பரப்பானது.
சக்திமானாக நடித்து அனைவரையும் ஈர்த்த முகேஷ் கண்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக செய்தி பரவியது.
#Shaktimaan actor #mukeshkhanna
— सिने चिट्ठा (@cinechittha) May 11, 2021
Rubbishes All The Rumours; Says He's 'Perfectly All Right'....#MukeshKhanna #DeathHoax pic.twitter.com/8r46CCyMLW
அதை தொடர்ந்து முகேஷ் கண்ணாவுக்கு அதிகம் பேர் போன் செய்து விசாரித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அது வதந்தி என விளக்கம் அளித்திருக்கிறார்.
அதன் பிறகு ஒரு வீடியோ வெளியிட்டு தான் நலமாக இருப்பதாக ரசிகர்கள் அனைவருக்கும் தெரிவித்து உள்ளார்.
அதில் தனக்கு கொரோனா இல்லை, மருத்துவமனையில் அட்மிட் ஆகவும் இல்லை, தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.