நாட்டிங்காமில் சிக்ஸரால் ஓடினை உடைத்த வீரர்! பார்வையாளர்களின் தலையில் விழுந்த சிதறல்கள் (வீடியோ)
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷாமர் ஜோசப் அடித்த சிக்ஸர் பெவிலியன் ஓடினை உடைத்தது.
மேற்கிந்திய தீவுகள் 457
நாட்டிங்காமின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் நடந்து வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 457 ஓட்டங்களும் குவித்தன. மேற்கிந்திய தீவுகளின் இன்னிங்சில் கடைசி வீரராக ஆடிய ஷாமர் ஜோசப் அதிரடி ஆட்டத்தில் தெறிக்கவிட்டார்.
Omg that six by Shamar Joseph broke the roof and part of that roof fell on the spectators unbelievable#WTC25 | ? #ENGvWI pic.twitter.com/xU8IMTgF5T
— Cinephile (@jithinjustin007) July 20, 2024
அதிர வைத்த சிக்ஸர்
27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்கள் விளாசினார். அட்கின்ஸன் ஓவரில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று, பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்த கட்டிடம் ஒன்றின் ஓடினை உடைத்தது.
ஓடுகள் உடைந்து பார்வையாளர்களின் மேலே அதன் சிதறல்கள் விழ, அவர்கள் தலையில் கை வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
4வது டெஸ்டில் விளையாடி வரும் ஷாமர் ஜோசப் (Shamar Joseph) 14 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். அதில் 2 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |