உலகக்கோப்பை ஆட்டத்தில் இது மிகப்பெரிய அவமானம்: ரொனால்டோவின் காதலி குமுறல்
FIFA உலகக்கோப்பை போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறாதது மிகப்பெரிய அவமானம் என அவரது காதலி தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறவில்லை
கத்தாரில் இன்று, சுவிட்சர்லாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற்ற ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியில் உலகின் தலைசிறந்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெறாதது மிகப்பெரிய அவமானம் என அவரது காதலி Georgina Rodriguez தனது குமுறலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, செவ்வாயன்று நடந்த FIFA உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியில் இடம்பெறவில்லை.
AFP
கோன்கலோ ராமோஸ்
போர்ச்சுகல் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸின் இந்த முடிவு பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ரொனால்டோவின் மாற்று வீரரான கோன்கலோ ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்தார், அதுமட்டுமின்றி போர்ச்சுகல் அணி 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2022 உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி அதிக கோல் அடித்த ஆட்டம் இதுவாகும்.
இருப்பினும், பல ரொனால்டோ ஆதரவாளர்கள் போர்ச்சுகல் மேலாளரின் முடிவிற்கு மகிழ்ச்சியடையவில்லை. இதில் ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினாவுக்கும் ஏற்புடையதாக இல்லை.
ரொனால்டோவின் காதலி குமுறல்
ஜார்ஜினா தனது இன்ஸ்டா பக்கத்தில், வாழ்த்துக்கள் போர்ச்சுகல். 11 வீரர்கள் தேசிய கீதம் பாடும் போது அனைவரது பார்வையும் உங்கள் மீதுதான் இருந்தது. உலகின் தலைசிறந்த வீரரை இந்த ஆட்டத்தில் இடம்பெறாமல் போனது என்ன ஒரு அவமானம்.
ரசிகர்கள் ரொனால்டோவை கேட்பதையும் அவரது பெயரைக் கத்துவதையும் நிறுத்தவில்லை. கடவுளும் பெர்னாண்டோவும் சேர்ந்து இதேபோல் இன்னொரு போட்டியிழும் இதே அதிர்ச்சியை எங்களுக்கு தரட்டும், என்று அவர் எழுதினார்.
இந்த பதிவின் மூலம், அவர் போர்ச்சுகல் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸின் முடிவின் மீது எவ்வளவு கோபத்துடன் இருக்கிறார் என்பது தெரிகிறது.