கோபம் ஏற்றிய இங்கிலாந்து வீரர்கள்! பதிலடி கொடுத்த ஷமி-பும்ரா: கைதட்டி வரவேற்ற அற்புதமான காட்சி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சிறப்பாக விளையாடிய ஷமி மற்றும் பும்ராவை, இந்திய வீரர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில், பேட்டிங்கை துவங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், இந்திய அணி குறைவான இலக்கத்திற்குள் அவுட் ஆக்கி, இந்த போட்டியை ஜெயித்துவிடலாம் என்று இங்கிலாந்து வீரர்கள் எண்ணினர்.
ஆனால், 8-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஷமி-பும்ரா ஜோடி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தனர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடியை அவுட்டாக்க முடியாமல் இருந்ததால், இங்கிலாந்து வீரர்கள் ஸ்ட்லெஜிங்கில் ஈடுபட்டனர்.
அதற்கு இந்த ஜோடி தங்கள் பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தது. இதன் பலனாக மொகம்மது ஷமி 70 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Watch:
— OneCricket (@OneCricketApp) August 16, 2021
Shami and Bumrah receiving a heroes' welcome at the end of the dramatic morning session on Day 5 of Lord's Test match!
Game-changing partnership from the two Indian fast bowlers!#Shami #Bumrah #INDvENG #Anderson #Buttler #LordsTest #Ishant #Drawpic.twitter.com/CeSRdyg5RJ
இதே போன்று பும்ரா 64 பந்துகளில் 34 ஓட்டங்கள் குவித்து களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 298 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 272-ஐ நிர்ணயித்தது.
ஒரு கட்டத்தில் நாம் எங்கு குறைந்த ஓட்டத்திற்குள் ஆல் அவுட் ஆகிவிடுவோமோ என்று கேப்டன் கோஹ்லி உட்பட இந்திய வீரர்கள் அஞ்சிய போது, பும்ரா-ஷமி ஜோடி சிறப்பாக விளையாடி இறுதி வரை அவுட்டாகமல் வந்ததால், அவர்களை வீரர்களின் அறையில் இருந்த இந்திய வீரர்கள் கை தட்டி வரவேற்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.