எனது வெற்றிக்கு இவர்கள் தான் காரணம்! புதிய மைல்கல்லை எட்டிய முகமது ஷமி உருக்கம்
கிரிக்கெட்டில் தான் பெற்ற வெற்றிக்கு காரணமானவர்களை குறித்து இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய உடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டிய 5வது வீரராக ஷமி சாதனை படைத்தார்.
இதுகுறித்து ஷமி கூறியதாவது, கிரிக்கெட்டில் நான் பெற்ற வெற்றிக்கு, என் தந்தைக்கு தான் நான் நன்றி செல்ல வேண்டும்.
நான் எந்தவித வசதியும் இல்லாத கிராமத்தைச் சேர்ந்தவன், என் கிராமத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள இடத்திற்கு என்னை கிரிக்கெட் விளையாட என் தந்தை அனுப்புவார்.
Milestone Alert ? - 200 Test wickets for @MdShami11 ??#SAvIND pic.twitter.com/YXyZlNRkQ1
— BCCI (@BCCI) December 28, 2021
எனது தந்தை மற்றும் சகோதரர் எனக்கு பக்க பலமாக இருந்தனர் மற்றும் தற்போது நான் இந்த இடத்தில் இருப்பதற்கு அவர்கள் தான் காரணம் என ஷமி தெரிவித்துள்ளார்.