அவுஸ்திரேலிய தொடரிலிருந்து விலகிய இந்திய அணியின் முக்கிய வீரர்! உமேஷ் யாதவுக்கு கிடைத்த வாய்ப்பு
அவுஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்டால் உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை ஷமி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது
உமேஷ் யாதவுக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கொரோனா பாதிப்பால் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஷமி கொரோனவால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ANI
தற்போது ஷமி தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வில் இருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் உமேஷ் யாதவ் இந்திய அணிக்கு திரும்ப உள்ளார்.
இதற்காக அவர் கவுண்டி தொடரில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணியிலும் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோரும் இடம்பெறவில்லை.