பும்ராவுக்கு பதிலாக உலகக் கோப்பையில் களமிறங்கும் வீரர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது
முகமது ஷமி சர்வதேச போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வரும் 16ஆம் திகதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. ஏற்கனவே அவுஸ்திரேலியா சென்றுவிட்ட இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
முக்கிய வீரரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலகியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பும்ராவுக்கு பதிலாக மாற்றுவீரராக முகமது ஷமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக ஷமி இந்திய அணியுடன் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் வீரர்களாக முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அவுஸ்திரேலியா செல்ல உள்ளனர்.
Twitter