தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.
முகமது ஷமி விலகல்
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி முடித்துள்ளது.
இந்த தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிவடைந்து உள்ள நிலையில், இன்று மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
பின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.
AP
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெற்று இருந்த நிலையில், அவர் பிட்டாக இல்லை என பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்ததை தொடர்ந்து ஷமி டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உலக கோப்பை போட்டிகளின் போது அவரது கணுக்காலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாமல் உள்ளது.
ஒருநாள் அணியிலும் மாற்றம்
இதற்கிடையில் ஒரு நாள் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டு இருந்த இந்திய அணியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தீபக் சாஹர் விலகியுள்ளார்.
இந்நிலையில் தீபக் சாஹருக்கு பதிலாக இந்திய அணியில் மாற்று வீரராக ஆகாஷ் தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |