மீண்டும் தன்னை நிரூபித்த ஷமி! கில்-கெய்க்வாட் மிரட்டல் அரைசதம்..ஆஸி.யை நொறுக்கிய இந்திய அணி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மொகாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
ஷமி அதகளம்
முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 4 ஓட்டங்களில் ஷமி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஸ்டீவன் ஸ்மித் - வார்னர் கைகோர்த்தனர். இந்த ஜோடி 94 ஓட்டங்கள் சேர்த்தது. ஷமி 41 ஓட்டங்கள் எடுத்திருந்த ஸ்மித் போல்டானார்.
அதனைத் தொடர்ந்து அரைசதம் அடித்த வார்னர் 52 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்த வந்த லபுசாக்னே 39 ஓட்டங்களும், கிரீன் 31 ஓட்டங்களும், இங்கிலிஷ் 45 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர்.
ANI
ஸ்டோய்னிஸ் 29 ஓட்டங்களில் இருந்தபோது ஷமி ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களையும் ஷமி வெளியேற்றி மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷமி தன்னை பந்துவீச்சில் நிரூபித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது முறையாக அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் கில், கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
துவம்சம் செய்த கில்-கெய்க்வாட்
இருவரும் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் குவித்தது.
(IANS Photo)
ஆடம் ஜம்பா ஓவரில் கெய்க்வாட் 71 ஓட்டங்களிலும், கில் 74 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 3 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார்.
GETTY IMAGES
ஆனால் கேப்டன் கே.எல்.ராகுலும் (58), சூர்யகுமார் யாதவும் (50) அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்திய அணி 48.4 ஓவரில் 281 ஓட்டங்கள் எடுத்து இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |