மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல வீராங்கனை - உலகக்கோப்பை போட்டியில் அதிர்ச்சி சம்பவம்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை தொடர் நியூசிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
West Indies Women cricket’s Team player named Connell has collapsed, Hope she is fine. That was terrible. prayers for her. #CricketTwitter pic.twitter.com/8E8BvWRlyh
— Gujju (@TheBluesIndia_) March 18, 2022
மௌன்ட் மௌங்கனி நகரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த வங்கதேசம் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றிப் பெற்றது.
இதனிடையே வங்கதேசம் அணி பேட் செய்த போது 47 வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனை ஷமிலா கானெல் முதலில் லேசான வயிற்று வலியை உணர்ந்த நிலையில் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.
அதன் காரணமாக மைதானத்தில் இருந்த அனைவரும் பதறிப்போன நிலையில் மைதானத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் உடனடியாக வருமாறு அழைக்கப்பட்டது. அதன்மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கானெல் குணமடைந்து மீண்டும் விளையாட வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.