பிரித்தானியாவுக்குள் நுழையக்கூடாது... தீர்ப்பைக் கேட்ட ஷமீமா கோபத்தில் செய்த செயல்: இன்னொரு முகத்தைக் காட்டிய வீடியோ
பிரித்தானியாவுக்குள் நுழையக்கூடாது என பிரித்தானிய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், ஷமீமா பேகம் கோபமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
15 வயதில், ஒரு மாணவியாக இருக்கும்போது ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலிருந்து மேலும் இரண்டு இளம்பெண்களுடன் சிரியாவுக்கு ஓடினார் ஷமீமா பேகம் (21).
2019ஆம் ஆண்டு, அவரைக் குறித்த செய்திகள் மீண்டும் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி அவரது பிரித்தானிய குடியுரிமை பறிக்கப்பட்டது.
அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக பிரித்தானியாவுக்குள் தன்னை அனுமதிக்கவேண்டும் என கோரினார் ஷமீமா பேகம்.
ஷமீமா நேர்மையாக முறையீடு செய்யவேண்டுமானால் அவரை பிரித்தானியா வர அனுமதிக்கவேண்டும் என கடந்த ஜூலை மாதம் மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து, உள்துறை அலுவலகம், நவம்பரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
ஷமீமாவை நாட்டுக்குள் அனுமதிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அளவில் அபாயம் ஏற்படும் என்றும், பொதுமக்கள் தீவிரவாதத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையை சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் வாதிட்டதைத் தொடர்ந்து நேற்று வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஷமீமாவை மேல் முறையீடு செய்வதற்காக பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என தீர்ப்பளித்தது.
தீர்ப்பைக் கேட்ட ஷமீமா கோபமுற்றதாகவும், கண்ணீர் விட்டு அழுததாகவும், குர்திஷ் மொழிபெயர்ப்பாளரான Mamdoh Abdalla என்பவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வளவு நாளும் பர்தா அணிந்து முகத்தைக்கூட காட்டாமல், பரிதாப முகம் காட்டிய ஷமீமா, கோபத்தில் தனது இஸ்லாமிய வேடத்தைக் களைந்து, மேற்கத்திய உடை அணிந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், ஷமீமா, ஜாக்கெட் மற்றும் லெக்கிங்ஸ் அணிந்து, கால்களில் ட்ரெய்னர் வகை ஷூக்களுடன், கண்களில் குளிர் கண்ணாடியும் அணிந்து கோபத்துடன் வேகமாக நடந்து செல்வதைக் காணலாம்.
தீர்ப்பு குறித்து ஷமீமாவிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டாராம் அவர். தற்போது சிரியாவிலுள்ள al-Roj என்னும் அகதிகள் முகாமில் இருக்கிறார் ஷமீமா.
மேற்கத்திய நாடுகளிலிருந்து ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்காக சென்ற பெண்கள் பலர், அந்த முகாமில்தான் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.