இங்கிலாந்துக்கு எதிராக அதிரடி சதம் விளாசிய பாகிஸ்தான் கேப்டன்! தடுமாறும் பவுலர்கள்
பாகிஸ்தான் அணித்தலைவர் ஷான் மசூட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார்.
ஷான் மசூட் அதிரடி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் முல்தானில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. சைம் அயூப் 4 ஓட்டங்களில் அட்கின்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷாஃபிக் மற்றும் அணித்தலைவர் ஷான் மசூட் நங்கூர பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
All class on the opening day of the series ?
— Pakistan Cricket (@TheRealPCB) October 7, 2024
Shan raises his bat to the fans' applause ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/MTei96UfKO
5வது டெஸ்ட் சதம்
குறிப்பாக, ஷான் மசூட் அதிரடியில் மிரட்டினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 200 ஓட்டங்களை கடந்தது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூட் தனது 5வது டெஸ்ட் சதத்தினை பதிவு செய்தார். மேலும் அவர் டெஸ்டில் 2000 ஓட்டங்களை கடந்தார்.
தற்போது வரை பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மசூட் 130 ஓட்டங்களுடனும், ஷாஃபிக் 94 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
5️⃣th Test hundred and first as captain! ?
— Pakistan Cricket (@TheRealPCB) October 7, 2024
Brilliant from Shan Masood ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/UqlAGiPj5f
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |