மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதமடித்த பாகிஸ்தான் வீரர்
டிரினிடாட்டில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் ஷான் மசூத் சதம் விளாசினார்.
ஷான் மசூத்
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்து வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ஓட்டங்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 92 ஓட்டங்களும், கவேம் ஹாட்ஜ் 84 ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் எடுத்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய பாகிஸ்தான் அணியில், ஷான் மசூத் (Shan Masood) சதத்தை பூர்த்தி செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இது 7வது சதம் ஆகும். 162 பந்துகளை எதிர்கொண்ட மசூத் 11 பவுண்டரிகள் அடித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |