இது வார்னருக்கு உணர்ச்சிகரமான தொடராக இருக்கும்! நாங்கள் வாழ்த்துகிறோம் - பாகிஸ்தானின் புதிய கேப்டன்
அவுஸ்திரேலியாவில் நாங்கள் விளையாடும் டெஸ்ட் தொடரில் ஆக்ரோஷமான மனநிலையுடன் இருப்போம் என்று பாகிஸ்தானின் கேப்டன் ஷான் மசூட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, கான்பெர்ராவில் நாளை தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் களமிறங்குகிறது.
டேவிட் வார்னருக்கு இது கடைசி டெஸ்ட் தொடர் என்பதால் அவுஸ்திரேலிய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதேபோல் அவரை வெற்றியுடன் வழியனுப்பும் முனைப்பில் அவுஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஷான் மசூட் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், 'பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புகிறது. நேர்மறையான மற்றும் ஆக்ரோஷமான மனநிலையுடனும் விளையாட, நாங்கள் ஒரு குழுவாக ஒன்றாக பேசியுள்ளோம் என்று நினைக்கிறேன்.
டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மாறிவிட்டது. நேரக் காரணி முக்கியமானது. பேட்டிங்கில் குழுவாக ஸ்கோர் ரேட் சற்று மேம்பட வேண்டும். மேலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
David Warner will be missed in the whites. ⚪#DavidWarner #Australia #AUSvPAK #Cricket #Sportskeeda pic.twitter.com/ntSKz8wlT9
— Sportskeeda (@Sportskeeda) December 5, 2023
அத்துடன் டேவிட் வார்னர் குறித்து அவர் கூறும்போது, 'டேவிட் வார்னருக்கு இது உணர்ச்சிகரமான தொடராக இருக்கும். அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலகளவிலேயே அவர் ஒரு சிறந்த வீரர்.
நாங்கள் அவருக்கு வாழ்த்து கூறுவோம். அவர் விளையாட்டின் சிறந்த பிரதிநிதியாக இருந்துள்ளார்' என்றார். 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷான் மசூட் 1597 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |