7வது முறையாக ஆசியக்கோப்பையை கைப்பற்றுமா இலங்கை? இந்திய அணியை வீழ்த்த ஷானகாவின் திட்டம்!
இந்திய அணியை வீழ்த்த தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என இலங்கை கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டி
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்தப்போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இலங்கை கேப்டன் தசுன் ஷானகா இந்திய அணியை வீழ்த்த வகுத்துள்ள திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.
ACC
ஷானாகாவின் திட்டம்
அவர் கூறுகையில், 'இந்தப் போட்டி முற்றிலும் ஆடுகளத்தைப் பொறுத்தது. போட்டியில் ஆடுகளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே நாங்கள் அதற்கேற்ப பக்கங்களை எடுத்துள்ளோம்.
இந்தியாவுக்கு எதிரான பந்துவீச்சு, நாங்கள் அதிக விக்கெட்டுகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும், அது எங்களுக்கு ஆட்டத்தை திறக்கும்' என கூறியுள்ளார். இதுவரை ஆசியக்கோப்பையை இந்திய அணி 7 முறையும், இலங்கை அணி 6 முறையும் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |