ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை! கேப்டன் ஷனகாவின் வியூகம்
இலங்கை வீரர்கள் இரண்டு இன்னிங்சிலும் துடுப்பாட்டம் செய்வதில் திறமையானவர்கள் என கேப்டன் ஷனகா தெரிவித்துள்ளார்
சேசிங்கில் சிறந்து விளங்கினாலும் முதலில் துடுப்பாட்டம் செய்யவும் தயாராக இருக்கிறோம் - இலங்கை கேப்டன் ஷனகா
துபாயில் நடைபெறும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
2022ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற இலங்கை அணியும், இரண்டு போட்டிகளில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வி கண்ட பாகிஸ்தான் அணியும் கோப்பைக்கான போட்டியில் இன்று மோதுகின்றன.
AP Photo
இந்த நிலையில் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெறுவது மிக முக்கியம் என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
'இங்கே நாணய சுழற்சி என்பது மிகவும் முக்கியமான காரணி ஆகும். ஆனால், இன்னும் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் என இரண்டிலும் சிறப்பாக விளையாடுவதில் திறமையானவர்கள்.
Getty Images
நாங்கள் இங்கு விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் புள்ளி விவரங்களை பயன்படுத்தி சேசிங்கை செய்தோம். ஆனால் நாணய சுழற்சியில் ஒருவேளை தோல்வியுற்றால் முதலில் துடுப்பாட்டம் செய்ய தயாராக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.