கடைசி வரை போராடிய இலங்கை வீரர் ஷானகா..126 இலக்கை எட்ட முடியாமல் வார்னர் அணி படுதோல்வி
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் துபாய் கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.
ஸ்டோனின் மிரட்டல் பந்துவீச்சு
இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் 24வது போட்டியில், கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் துபாய் கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
துபாய் கேபிட்டல்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மையர் 34 (28) ஓட்டங்களும், கேப்டன் வின்ஸ் 32 (28) ஓட்டங்களும் எடுத்தனர்.
@X (ILT20Official)
மிரட்டலாக பந்துவீசிய ஓலி ஸ்டோன் 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குக்லெஜின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
@X (ILT20Official)
சொதப்பிய வார்னர்
பின்னர் களமிறங்கிய துபாய் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் வார்னர் 11 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
@X (ILT20Official)
பின்னர் வந்த வீரர்களும் 20 ஓட்டங்களை கூட தாண்டவில்லை. ஆனால் இலங்கை வீரர் தசுன் ஷானகா மட்டும் அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்று ஆடினார்.
@X (ILT20Official)
அவருக்கு உறுதுணையாக யாரும் நின்று ஆடாததால், துபாய் கேபிட்டல்ஸ் அணி 107 ஓட்டங்களுக்கு சுருண்டது. கடைசி வரை ஆட்டமிழக்காத ஷானகா 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் எடுத்தார்.
கல்ஃப் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஆயன் அஃப்சல் கான் 2 விக்கெட்டுளும், எராஸ்மஸ், முஸரபாணி, ஓவர்டன், ஜோர்டான் மற்றும் ஸுபைர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
@X (ILT20Official)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |