அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடாதது ஏன்? மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் விளக்கம்
2022 ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடாதது குறித்து பயிற்சியாளர் ஷேன் பாண்ட் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர், 2022 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், அவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை.
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அர்ஜுன் விளையாடாதது குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
Photo Credit: Mumbai Indians
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
'அர்ஜூன் பிளேயிங் லெவனில் இல்லாதது குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் அர்ஜூன் தனது பேட்டிங் மற்றும் பில்டிங்கில் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டிய தேவை உள்ளது. அணியில் இடத்தை பிடிக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த சீசனில் அவர் அதனை சரி செய்வார் என நம்புகிறேன். இனி வரும் சீசன்களில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: Sportzpics / IPL
22 வயதான அர்ஜுன், 30 லட்சத்திற்கு மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.