மறைந்த ஷேன் வார்னே உயில் விபரம் வெளியீடு! மனைவிக்கு எதுவுமில்லை... மொத்தமும் யாருக்கு?
மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் உயில் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஷேன் வார்னே
ஷேன் வார்னே கடந்தாண்டு மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது 20.7 மில்லியன் டொலர் சொத்துக்கள் அவரது குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனது சொத்துக்களில் தலா 31 சதவீதத்தை தனது மூன்று குழந்தைகளான ஜாக்சன், புரூக் மற்றும் சம்மர் ஆகியோருக்கு விட்டுச் சென்றதாக விக்டோரியாவில் உள்ள உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகின்றன.
மருமகன்
எஞ்சியதை அவரது சகோதரர் ஜேசன், அவரது சொத்தில் இரண்டு சதவிகிதமும், மற்றும் அவரது மருமகள் டைலா மற்றும் மருமகன் செபாஸ்டியன் ஆகியோருக்கு இடையே இரண்டரை சதவிகிதமும் சொத்துகள் பிரித்து தரப்பட்டுள்ளன.
வார்னின் வாகனங்கள் - ஒரு யமஹா மோட்டார் பைக், BMW மற்றும் Mercedes ஆகியவை ஜாக்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு மட்டும் 3லட்சத்து 75 டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திரமும் அவரது மனைவியுமான சிமோன் கலாஹன் மற்றும் அவரது முன்னாள் மனைவி லிஸ் ஹர்லிக்கு அவரது சொத்தில் எதுவும் வழங்கப்படவில்லை.