வார்னே மாரடைப்புக்கு இதுதான் காரணமா? மனம் திறக்கும் மேலாளர்
அவுஸ்திரியாவின் சுழற்பந்து சம்பவான் ஷேன் வார்ன் இறப்பிற்கு அவரது மிகவும் மோசமான உணவு கட்டுப்பாடே காரணமாக இருக்கலாம் என ஷேன் வார்னேவின் மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரியாவின் சுழற்பந்து சம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாய்லாந்தில் மரணமடைந்தார்.
இதையடுத்து உலக கிரிக்கெட் உலகமே அவருக்கு துக்கம் அனுசரித்து, தங்கள் வருத்ததையும் அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷேன் வார்னேவின் மாரடைப்புக்கு மிகவும் மோசமான உணவு கட்டுப்பாடு முறைகளே காரணம் என அவரது மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ஷேன் வார்னேவின் மாரடைப்புக்கு அவர் இறுதியாக மேற்கொண்ட மிகவும் மோசமான திரவ உணவு கட்டுப்பாடுகளே முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஷேன் வார்னேவுக்கு மாரடைப்பு ஏற்படுவதுக்கு 14 நாள்கள் முன்பு தொடங்கிய இந்த திரவ உணவு முறையை, ஒருநாளுக்கு நான்கு முறை கடைபிடித்தார் அல்லது வெண்ணை மற்றும் லாசென் கொண்ட வெள்ளை பன்களை அதிகமாக உட்கொண்டார்.
இது அவருக்கு அடிக்கடி மார்புவலி மற்றும் அதிகமான வியர்வையை கடந்த சில நாள்களாக ஏற்படுத்தியதாக ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்துள்ளார்.
மேலும் வாழ்க்கையில் பெரும்பாலும் புகைப்பிடிப்பவராக இருந்தது கூட இந்த மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என ஷேன் வார்னேவின் மேலாளர் ஜேம்ஸ் எர்ஸ்கின் தெரிவித்துள்ளார்.