4 பெண்களை தனது அறைக்கு அழைத்த ஷேன் வார்னே - வெளியான சிசிடிவி காட்சிகள்
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத்திற்கு முன்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தனர்.
வார்னே மரணம் பலரும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.
ஆனால் வார்னே இயற்கையான முறையில் தான் உயிரிழந்தார் என அடாப்சி ரிப்போர்ட் தெரிவித்திருந்தது. இதனிடையே மார்ச் 4 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் வார்னே 4 பெண்களை தனது அறைக்கு அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 2 பேரை நண்பர்களுக்கும், 2 பேரை தனக்கும் மசாஜ் செய்யும்படி வார்னே கோரியுள்ளார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வார்னேவுடன் இருந்த அந்த பெண்கள் 2.58 மணிக்கு அறையில் இருந்து வெளியேறியுள்ளனர்.