டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? ஷேன் வார்ன் கணிப்பு
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லப்போகும் அணியை ஆஸ்திரேலியா சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் கணித்துள்ளார்.
நவம்பர் 14ம் திகதி துபாயில் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.
இதுவரை டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரு அணிகளும் வென்றதில்லை என்பதால், எந்த அணி முதல் முறையாக சாம்பியனாக முடி சூட போகிறது என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், 2021 டி20 உலகக் கோப்பை சாம்பினாக முடி சூட போகும் அணியை ஆஸ்திரேலியா சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன் கணித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அதன் முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் என வார்ன் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள்.
#ICCT20WorldCup2021 final tmrw ! Who’s winning ? Make sure you check out @Dafabet for all the latest odds and in play too ! Go the Aussies hahaah. pic.twitter.com/bcAxcXy5J0
— Shane Warne (@ShaneWarne) November 13, 2021
அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான வெற்றிக்குப் பிறகு, ஆஸ்திரேலியா அதன் முதல் டி20 கோப்பையை வெல்லப்போகிறது என்று நினைக்கிறேன் என வார்ன் தெரிவித்துள்ளார்.