ஷேன் வார்ன் மரணத்திற்கு காரணம் போதை பொருட்களா? - அதிர்ச்சி தகவல்
அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் காலமான நிலையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வார்ன் 1992 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியா அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள வார்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சில தினங்களுக்கு முன் இறங்கிய வார்ன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படும் நிலையில் அவரது மரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் மைதானங்களுக்கு வெளியே உடற்தகுதி பற்றி கவலைப்படாத வார்ன் மசாஜ், மது , மாது என்று சுற்றியதாகவும்,அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதேசமயம் வார்னின் குரு ராட் மார்ஷ் உயிரிழந்த சோகத்தில் எடுத்துக் கொண்ட போதையில் அவர் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.