ஷேன் வாட்சன் சிக்ஸர் மழை! 61 பந்தில் 122 ரன்..தூளாக நொறுங்கிய தென்னாபிரிக்கா
தென்னாப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் 122 ஓட்டங்கள் விளாசினார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் நேற்றையப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் ஷேன் வாட்சன் (Shane Watson) ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கல்லம் பெர்குசனும் அதிரடியில் மிரட்ட, அவுஸ்திரேலிய அணி 260 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் வாட்சன் 61 பந்துகளில் 9 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 122 ஓட்டங்கள் விளாசினார். பெர்குசன் 85 (43) ஓட்டங்களும், பென் டன்க் 34 (16) ஓட்டங்களும் குவித்தனர்.
பின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 17 ஓவரில் 123 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆம்லா 30 (19) ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலியாவின் பென் லாஹ்லின் 3 விக்கெட்டுகளும், டோஹெர்ட்டி மற்றும் மெக்கைன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |