போட்டி முடிவுகள் குறித்து பேசியதே இல்லை..!சி.எஸ்.கே முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த போது போட்டி முடிவுகளை பற்றி எப்போதும் பேசியது இல்லை என முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
2023 ஐபிஎல்
2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் மாதம் 31ம் திகதி தொடங்க உள்ளது.
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது.
மேலும் இந்த தொடரே கேப்டன் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்பதால், சென்னை அணியின் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கோப்பையை எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளனர்.
போட்டி முடிவுகள் குறித்து பேசியது இல்லை
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முந்தைய ஆண்டுகளில் விளையாடிய முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், அணியின் சூழல் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கேப்டன் தோனி உருவாக்கிய சூழல் என்பது, நீங்கள் எப்போது ஜாலியாக இருக்கலாம் என்பதே. அமர்ந்து பேசும் போது கூட போட்டி முடிவுகள் குறித்து விவாதங்கள் எழுந்ததே இல்லை.
அத்துடன் வீரர்கள் எப்போதும் மகிழ்ச்சிக்காகவே அங்கு இருந்தோம், சென்னை அணியில் விளையாடியது எனக்கு சிறப்பான நேரமாக இருந்தது என்று வாட்சன் உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.