SLC டி20 லீக் கிரிக்கெட் தொடரை வென்ற கிரேய்ஸ் அணித்தலைவர் செய்த செயல்! குவியும் பாராட்டு
SLC டி20 லீக் கிரிக்கெட் தொடரில் தொடர் ஆட்ட நாயகன் விருது பெற்ற தசுன் ஷானக, விருதுடன் வழங்கப்பட்ட பரிசுத் தொகை மொத்தத்தையும் இலங்கை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
கண்டி பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த SLC டி20 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் SLC ரெட்ஸ் அணியை 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஷானக தலைமையிலான SLC கிரேய்ஸ் அணிகள் சாம்பியம் பட்டத்தை கைப்பற்றியது.
முழுத்தொடரில் 64.50 என்ற சராசரியில், 258 ஓட்டங்கள் எடுத்த தசுன் ஷானக தொடர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
வெற்றிபெற்ற கிரேய்ஸ் அணிக்கு, 20 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாவது இடத்தை பிடித்த ரெட்ஸ் அணிக்கு 15 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன், தொடர் ஆட்டநாயகன் விருதை வென்ற தசுன் ஷானகவுக்கு 2 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
No surprises here! Dasun Shanaka - Awarded the 'Player of The Tournament' for his exceptional performance throughout the tournament. ??️️#DialogSLCT20 pic.twitter.com/SjzVt4JrzF
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) August 24, 2021
2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மொத்தத்தையும் இலங்கை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளார் தசுன் ஷானக.
தசுன் ஷானகவின் நற்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.