பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து இசை நிகழ்ச்சி செய்வதன் பின்னணியில் இருப்பது அரசியலா?
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினர் பிரபல பாடகர்களை வரவழைத்து பிரம்மாண்டமாக பல இசை நிகழ்சிகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (29-10-2023) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் பாடகர் சங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்கள் அனைத்தும் மக்களை கவர்ந்திந்தது. ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வருகையும், விற்பனையாகியிருக்கும் டிக்கெட்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இதற்கு பிரதான காரணமாக இருப்பது அரசியல் மட்டுமே. அதில் மொட்டு கட்சியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முன்னாயத்தங்களாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து விளையாட்டுதுறைக்கு பணம் சேகரிப்பதற்காகவும், வளர்ந்து வரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை சூழ்ச்சியான முறையில் தோற்கடித்து தமிழ் மக்களை திசை திருப்புவதற்குமாகவே அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
பார்வையாளர்களுக்கு இடையூறு
கடந்த சில மாதங்களுக்கு முன் பல வெற்றி நிகழ்ச்சிகளை நடாத்தி வந்த AARA Entertinment நிறுவனம், பல இன்னல்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த டிக்கெட் விற்பனையில் 50% குறைவான டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கும் பட்சத்தில் 360 பாகையில் மேடை அமைக்கப்பெற்றிருக்கும் என்று விளம்பரம் செய்ததாகவும் பார்வையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.
அது மட்டுமன்றி பணம் செலுத்தி டிக்கெட் வாங்கியவர்களுக்கு விருப்பமான பாடல்கள் ஏராளமாக இருந்தபோதிலும், அரசியல் பிரமுகர்களின் விருப்ப பாடல்களும், பார்வையாளர்களுக்கு இடையூறாகும் வகையில் இடைநடுவில் சிங்கள அரசியல்வாதிகளின் நடனங்களும் நடைபெற்றது.
பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இலவச டிக்கெட்டுகளை கொடுத்திருந்தனர் என்கிற தகவல்களும் வெளியாகியிருக்கிறது.
மேலும் பல பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் மாதங்களில் ஒழுங்கு செய்துக்கொண்டிருக்கும் AARA ENTERTINMENT இந்நிகழ்ச்சியில் பல்வேறு இன்னல்களை சந்தித்திருப்பது மட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை சரியான முன்னேற்பாடுகளின்றி செய்திருப்பதனால் எதிர்வரும் நிகழ்ச்சிகள் முன்னேற்பாடுகளுடன் நடைபெறுமா? இசையால் வாக்கு சேகரிப்பு இடம்பெறுமா? என்ற கேள்வி பர்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |