நங்கூரமாக நின்ற ஜோ ரூட்டை ஆசை காட்டி அவுட் ஆக்கிய ஷர்துல் தாகூர்! எப்படி தெரியுமா? வைரலாகும் வீடியோ
இந்திய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் போல்டாகி கடும் விரக்தியுடன் வெளியேறும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராடி வருகிறது.
ஐந்தாம் நாளான இன்று சற்று முன் வரை இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இன்னும் 30 ஓவர்களுக்கு மேல் இருப்பதால், இந்திய அணி மீதமுள்ள 3 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திவிடும் என்று நம்பப்படுகிறது.
இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வீரர்கள் வந்த வேகத்தில் சென்றாலும், அந்தணியின் கேப்டன் ஆன, ஜோ ரூட் இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து நங்கூரம் போல் நின்றார்.
The LORD striketh gold! ?
— Sony Sports (@SonySportsIndia) September 6, 2021
Shardul bowls one in the corridor outside off and Root chops it on! ??
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #Shardul #Root pic.twitter.com/m4PoFlEhWI
இதனால் கோலி, பும்ரா, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் என மாற்றி, மாற்றி கொடுத்தாலும், ஜோ ரூட் சிறப்பாக தடுத்து ஆடினார். இதையடுத்து ஷர்துல் தாகூர் போட்ட ஸ்லோ மீடியம் பாலில் ஜோ ரூட் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆப் திசையில் அழகாக ஆடுவது போன்று ஆசை காட்டி ஷர்தூல் தாகூர விச, அதை தெர்ட் மேன் திசை பாக்கம் அடிக்க நினைத்த ஜோ ரூட், இன் சைட் எட்ஜ் ஆகி பவுலியன் திரும்பினார்.
அதுவை நங்கூரம் போன்று பந்தை நிறுத்தி ஆடி வந்த ஜோ ரூட், அந்த ஒரு பந்தை அடித்து ஆட ஆசைப்பட்டு அவுட் ஆகிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.