ஹர்த்திக் பாண்டியா வேணாம்பா! இந்திய அணிக்கு செம ஆல்ரவுண்டரா இவர் கிடைச்சுட்டார்... ரசிகர்களின் திடீர் ஹீரோவான ஷர்துல் தாக்கூர்
இங்கிலாந்துடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி அணியின் ரன் வேட்டைக்கு உதவிய இந்திய வீரர் ஷர்துல் தாக்கூருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
ஓவல் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூர் பேட்டிங்கில் கலக்கி விட்டார், முதல் இன்னிங்சில் அதிரடியாக 57 ரன்கள் எடுத்ததோடு இரண்டாவது இன்னிங்சில் 60 ரன்களை நிதானமாக எடுத்துக் காட்டி அசத்தினார்.
ஷர்துதல் தாக்கூரிடம் டாப் பேட்ஸ்மென்களிடம் உள்ள தடுப்பாட்ட உத்தி, அருமையான டைமிங், அதிரடி பேட்டிங் எல்லாமே கலந்து உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகளில் 3 அரைசதங்களை எடுத்து அவர் அனைவரையும் அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில் ஷர்துலை ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ஜாம்பவான்களும் பாராட்டியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேவாக்கி டுவிட்டர் பதிவில், ஷர்துல் தாக்கூரை ‘லார்ட்’ என்றும் ‘மிடில் ஆர்டருக்கு எப்படி ஆட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார் எனவும் புகழ்ந்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் கூறும்போது, அவர் எப்போது இறங்கினாலும் கிரிக்கெட்டில் ஒரு மாற்றம் விளைகிறது என தெரிவித்துள்ளார்.
இதே போல பல ரசிகர்கள் கூறுகையில், ஹர்திக் பாண்டியாவை விட நீண்ட நாளைய ஆல்ரவுண்டட் தீர்வு ஷர்துல் தாக்கூர் தான் என தெரிவித்து வருகின்றனர்.