ஷேர் மார்க்கெட் மந்தம்..மதிப்பிழக்கும் பணம்? பட்ஜெட் எதிர்பார்ப்பு (காணொளி)
யூனியன் பட்ஜெட்டினால் பங்குச்சந்தையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை நிபுணர் PR.சுந்தர் விளக்கியுள்ளார்.
இதுவரை பாஜக அரசு ஊதியம் பெறும் நபர்களுக்கு, தனிநபர் வருவான வரியை நிறைய குறைத்துள்ளனர். 12 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று கடந்த ஆண்டு கூறியது, உண்மையிலேயே புரட்சிகரமான விடயம் என்று கூறலாம்.
ஆனால், வேலைக்கு என்று Organised sector, Unorganised sector என இரண்டு உள்ளன. பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பெரிய நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் போன்ற Organised sector ஆட்களுக்குத்தான் இது பயனுள்ளதாக இருக்கும்.
மாறாக, சராசரியாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஊதியம் பெறும் நபர்களுக்கு (Unorganised sector) இந்த மாற்றம் மூலம் எந்த பயனும் கிடையாது. அதே சமயம் மறைமுக வரியா ஜி.எஸ்.டி உள்ளது. சேமிப்பாக தங்க முதலீடு போன்றவற்றை செய்தாலும் அதற்கு வரி செலுத்துகிறார்கள்.
தற்போதைய அரசாங்கம் சேமிப்பை ஊக்குவிப்பது இல்லை; நேர்முக வரி குறைந்தாலும் அது அதிக ஊதியம் பெறுபவர்களுக்குத்தான் பயன் தரும்.
நடுத்தர மக்கள், Unorganised sectorகளில் பணிபுரிபவர்களுக்கு எல்லாம் வரி பயன் என்பது இல்லை மற்றும் பங்கு சந்தை சார்ந்த விடயங்களிலும் எல்லா வகையிலும் வரியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியைக் காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |